சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பில் நாட்டு மக்களுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்…!

சமூக வலைத்தளங்களின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான கருத்துக்களை பதிவிடுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கொன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார். இதில் தொடர்ந்து பேசிய அவர்,

மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்துக் கொண்டு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது.நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு கண்டு, ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னரையும் விட சிறந்த நிலைமையினை நாட்டில் ஏற்படுத்தும் வகையில் பொலிஸ் திணைக்களம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.அவசரகால நிலைமை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பவற்றை அமுல்படுத்தும்போது உரிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், சமூக வலைத்தளங்களின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான கருத்துகளையும் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை சீர்குலைக்கும் வகையிலான கருத்துகளையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்