பேஸ்புக்கில் ஒழுங்கமைக்கபட்ட களியாட்டம்…!! போதை மாத்திரைகளுடன் கைதான 51 இளைஞர் யுவதிகள்..!!

பலங்கொட – பெலிஹுலோய பகுதியில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகப்புத்தகம் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த 51 இளைஞர், யுவதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்