மிகப் பலத்த பாதுகாப்புகளின் மத்தியில் மட்டு சீயோன் தேவாலயத்தில் பேராயர் மல்கம் ரஞ்சித்!!

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்றையதினம் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.மட்டக்களப்புக்கு இன்று காலை விஜயம் செய்த அவர், ஆயர் இல்லத்திற்குச் சென்று அங்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினைச் சந்தித்து கலந்துரையாடினார்.அதனைத்தொடர்ந்து சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த பேராயர், அங்கு புனரமைக்கப்பட்டுவரும் ஆலயத்தினை பார்வையிட்டார்.இதன்போது குறித்த தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்தார். இந்த விஜயத்தின்போது இராணுவ அதிகாரிகள், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, அருட் தந்தையர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.தற்போது முன்னெடுக்கப்படும் புனரமைப்புப் பற்றி இராணுவத்தின் பொறியியற் பிரிவிடமும் கேட்டறிந்து கொண்டதுடன், காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய இறையாசீர்வாதம் கிடைக்கத் தாம் பிராத்திப்பதாகவும் இவ்வாலயப் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் இராணுவத்தினருக்கு தாம் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இவ்வாறான அனர்த்தங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்பதாகவும், நாட்டில் நிரந்தர சாந்தி சமாதானம் நிலைக்கவேண்டியும் தான் ஆண்டவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்