அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக திடீர் போராட்டத்தில் குதித்த முல்லை வைத்தியர்கள்…!!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வாயிலுக்கு முன் பதாதைகளுடன் ஒன்று கூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் 30 நிமிடங்கள் வரை குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் ஏந்திய பதாதைகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.இதன்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடைய குடியியல் உரிமை இல்லாதொழிக்கப்படவேண்டியது ஏன் என்ற துண்டுப்பிரசுரமும் பாதசாரிகளிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், ஒளடத அதிகாரத்தை மாபியாவிடத்தில் கையளிக்காதே, இலங்கை மருத்துவ சங்கத்திற்கு அரசியல் தலையீடு செய்யாதே, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்