பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று மீண்டும் கூடும் தெரிவுக்குழு..!! இன்னும் சற்று நேரத்தில் ஆஜராகிறார் ஹிஸ்புல்லா…!!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது.இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக்குழு கூடவுள்ளதுடன் இதில் சர்ச்சைக்குரிய, கிழக்கு மாகாணத்தின் முன்னால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் சமூகமளித்து சாட்சியமளிக்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவுக்குழு விசாரணைகளுக்கு சமூகமளித்திருந்ததுடன் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றினையும் பதிவுசெய்திருந்தார்.அதன்படி தீவிரவாதி சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில், இன்று தெரிவுக்குழுவுக்கு செல்லும் ஹிஸ்புல்லாஹ் அசாத் சாலியின் குறித்த கருத்துக்கு பதிலளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.எவ்வாறாயினும், குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ரத்துச் செய்யவேண்டுமென்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக கோரியுள்ளபோதும் அரசாங்க தரப்பு மறுத்துவருகின்றது.இதனடிப்படையிலேயே இன்றைய தினமும் தெரிவுக்குழு கூடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்