முச்சக்கரவண்டிப் பயணிகளுக்கு ஓர் அவசர அறிவிப்பு…!! அதிகரிக்கும் பயணக் கட்டணங்கள்..!

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழில் தொடர்பான தேசிய முச்சக்கரவணடி சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மேலும் சில காரணங்களை அடிப்படையாக கொண்டு முதலாவது கிலோ மீற்றருக்கான முச்சக்கரவண்டி கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.ஆனாலும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு முச்சக்கர வண்டிகளின் மேலதிக பாகங்களின் விலை அதிகரிப்பும் காரணம் என குறிப்பிடப்படுகின்றது.அதற்கமைய தற்போது முதலாவது கிலோ மீற்றருக்கு 50 ரூபாவும் இரண்டாவது கிலோ மீற்றருக்கு 40 ரூபாவும் அறிவிடப்படுகின்றது. அதிகரிப்பிற்கமைய முதலாவது கிலோ மீற்றருக்கு 60 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் இரண்டாவது கிலோ மீற்றருக்கு 40 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்