பயங்கரவாதி சஹ்ரானின் ஒருங்கிணைப்பாளர் குருநாகலில் பொலிஸாரால் அதிரடியாகக் கைது..!!

குருணாகலில் பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.குருணாகல் விசேட பொலிஸ் குழுவினரால் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுபொத்த பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் அரோஷ் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த அரோஷ், பயங்கரவாத குழுவின் செயற்பாட்டு உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேக நபரிடம் இருந்து சுமார் 80 அடி ஆழ நிலத்தடியில் ஆராய கூடிய ஸ்கேன் உபகரணங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.புதையல் அகழ்வு தொடர்பிலும் சந்தேக நபருக்கு குற்றம் சாட்டப்பட்டதுடன், இந்த உபகரணங்களை அகழ்வாராய்ச்சிக்காக பயன்படுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்