அனல் பறக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்: மொத்த மைதானமே எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்த அற்புதமான பிடியெடுப்பு…!!

மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் ஒருவரின் கேட்ச் (Catch) ஒன்று இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது.நேற்று மேற்கு இந்திய தீவுகள் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணி, மேற்கு இந்தியா தீவுகள் இரண்டு அணிகளும் மிகவும் வலுவான அணிகளாக இருப்பதால் இந்த போட்டி அதிக கவனம் பெற்றது.முக்கியமாக போட்டியின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியா அணி மோசமாக ஆடியது. வரிசையாக ஆஸ்திரேலியா அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது.இது போட்டியை மேலும் பரபரப்பிற்கு உள்ளாக்கியது. ஆனால் அதன்பின் ஸ்மித் மற்றும் நாதன் நைல் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி பிழைத்தது.நாதன் நைல் மொத்தம் 92 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார். வரிசையாக 100 ரன்களை அடிப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது.மேற்கு இந்திய தீவுகள் இறங்கியது: அதன்பின் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 288 ரன்கள் இலக்கை நோக்கி துடுப்பாடத் களமிறங்கியது. அப்போது கெயில் மற்றும் லெவிஸ் ஓப்பனிங் இறங்கினார்கள். லெவிஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால், கெயில் அதிரடியாக ஆடி வந்தார்.தோல்வி அடைந்தது.ஆனால், போட்டியின் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் 50 ஓவருக்கு 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இந்தப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஷெல்டன் கோல்டெல் பிடித்த கேட்ச்தான் பெரிய வைரலாகி உள்ளது. அவர் ஸ்மித் அடித்த பந்தை 44 வது ஓவரில் பிடித்தார். பவுண்டரி  எல்லைக்குள்  அருகில் நின்றவர் சிக்ஸ் போக வேண்டிய பந்தை கையால் தடுத்தார். ஆனால் தடுத்த வேகத்தில் அவர் பவுண்டரி எல்லைக்குள் சென்றார்.ஆனால், உடனே சுதாரித்தவர், வேகமாக பந்தை வெளியே தூக்கி போட்டார். பின் வேகமாக பவுண்டரி லைனை விட்டு மைதானத்திற்குள் வந்தார். வந்த வேகத்தில் அந்த பந்தை வேகமாக பிடித்தார். இந்த கேட்சை பார்த்து ஸ்மித் அதிர்ச்சி ஆனார். இந்த  பார்த்து மைதானத்தில் இருந்த எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். மேற்கு இந்திய அணியின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா ரசிகர்கள் கூட இந்த கேட்சை கைதட்டி வரவேற்றார்கள். இந்த கேட்ச் தற்போது வீடியோவாக வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

https://twitter.com/wwos/status/1136732060532518912?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1136732060532518912&ref_url=https%3A%2F%2Ftamil.mykhel.com%2Fcricket%2Ficc-world-cup-2019-viral-catch-of-sheldon-cottrell-in-the-wi-match-against-aus-014860.html

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்