புகையிரதப் பாதையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்..!! மலையகத்தில் சோகம்…!

தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் புகையிரதப் பாதையில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் புகையிரத பாதையில் இன்று காலை 10 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் சென்ற பாதசாரதிகள், சடலமொன்று கிடப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை ஒலிரூட் கீழ்பிரிவைச் சேர்ந்த பெனடிக் ரொஷான் (23) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் புகையிரதத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளாரா? அல்லது எவராவது கொலை செய்து புகையிரத பாதையில் எரித்துச் சென்றார்களா? அல்லது இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா? என பல கோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மரண விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்