தொடர் குண்டுத் தாக்குதல்களால் முற்றாக வெறிச்சோடிப் போன சிங்கராஜவனம்..!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிங்கராஜ வனத்தை பார்வையிட வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிங்கராஜ வன பரிபாலன காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, சிங்கராஜ வனத்துக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 165 எனவும், இதற்கு முன்னர் வேறு தினங்களில் மாதமொன்றுக்கு 1,500 -2,000 வரையான உல்லாசப் பயணிகள் சிங்கராஜ வனத்துக்கு வருகை தருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.சிங்கராஜ வனத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளிடமிருந்தே அதிகளவான வருமானம் இதுவரை காலமும் ஈட்டப்பட்டு வந்தது. உல்லாசப் பயணி ஒருவரிடமிருந்து இவ்வனத்துக்கு செல்லும் நுழைவாயில் பிரவேசக் கட்டணம் 575 ரூபா அறவிடப்படுகின்றது.உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்தமையால், சிங்கராஜ வனத்துக்கு கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடமும் தற்போது வெறிச்சோடிக் காணப்படுவதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்