உலகக் கிண்ண பயிற்சி ஆட்டம்…பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தது ஆப்கானிஸ்தான்..!!

உலகக் கிண்ண தொடருக்கான முதலாவது பயிற்சி போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம், திடகாத்திரமான நம்பிக்கையுடன், உலகக்கிண்ண தொடருக்குள் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி அடியெடுத்து வைக்கவுள்ளது.பிரிஸ்டொல் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 47.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக பாபர் அசாம் 112 ஓட்டங்களையும், சொயிப் மாலிக் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பந்துவீச்சில் மொஹமட் நபி 3 விக்கெட்டுகளையும், டவ்ளாட் சத்ரான் மற்றும் ரஷீத்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 263 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஹஸ்மதுல்லா சயீடி 74 ஓட்டங்களையும், ஹஸ்ரதுல்லா சஸாய் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளையும், இமாட் வசிம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்