பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி வாகை சூடிய பிரதமர் மோடிக்கு இலங்கைத் தலைவர்கள் வாழ்த்து…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.நடந்து முடிந்துள்ள இந்திய பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.நடைபெற்று முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.இந்நிலையில், இதேவேளை நரேந்திர மோடியின் இந்த வெற்றிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.குறித்த மூவரும் தமது டுவிட்டர் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்