நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி அமைச்சு எடுக்கவுள்ள புதிய நடவடிக்கை…!

இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.அரச பாடசாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கான செலவீனங்களை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அசுறுத்தல் நிலைமைகளின் காரணமாகவே இந்த முடிவினை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்