நள்ளிரவில் பாழடைந்த வீட்டிற்குள் கேட்ட வெடிச் சத்தங்கள்… நிம்மதியிழந்த தவித்த பொதுமக்கள்..!

மன்னாரில் நேற்றிரவு திடீரென கேட்ட வெடிச் சத்தம் காரணமாக மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.நானாட்டான் அச்சங்குளம் கிராமத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர்.பாழடைந்த வீட்டுக்குள் பட்டாசு வெடித்தமையினால் அதன் அழுத்தம் அதிகமாகி பெரும் சத்தம் கேட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும், குறித்த இடத்தில் சிறு ஆணிகளும், போத்தல் துண்டங்களும் சிதறிக் கிடந்ததாக பிரதேச மச்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்