உடன் அமுலுக்கு வரும் வகையில் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்..!

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.இதேவேளை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரவி விஜய குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த இடமாற்றம் மற்றும் நியமனம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.மாத்தறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றும் ரவி விஜய குணவர்த்தன, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்