வெளிநாடுகளிலிருந்து யாழ் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி…!

வெளிநாட்டிலிருந்து வட மாகாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில் மூலம் வட மாகாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு 50 வீதம் வரை கழிவு வழங்கப்படவுள்ளது. நான்கு பேருக்கு மேற்பட்ட வெளிநாட்டு குழுவினருக்கே இந்த வசதி வழங்கப்படவுள்ளது.எதிர்வரும் 24ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலாகும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல ஹோட்டல்களின் கட்டணம் 50 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களுக்கு இந்த சலுகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை பெற்றுக்கொள்ளும் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்