இலங்கையிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்… வரலாற்றில் முதல் தடவையாக நடக்கப் போகும் நிகழ்வு..!

எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் 762 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.இந்தத் தகவலை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள அறிவித்துள்ளார்.குறித்த சிறை கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் வைத்து மேற்கொள்ளப்படவுள்ளது.இந்தச் சிறை கைதிகளில் 26 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சிறைச்சாலை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவிலான சிறை கைதிகள் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்