யாழ் பிரபல கல்லூரிக்கு முன்பாக தரித்து நின்ற காரினால் பரபரப்பு…!!

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீண்ட நேரமாக கார் ஒன்று தரித்து நின்றமையினால் அப்பகுதியில் இன்று மதியம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீல நிறமுடைய கார் ஒன்று காலையில் இருந்து தரித்து நின்றுள்ளது.இதனை அவதானித்த பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் கார் நின்ற இடத்திற்கு யாரையும் செல்லவிடாது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.பின்னர் பாடசாலை நிறைவடையும் நேரம் என்ற காரணத்தினால், வழமையாக போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பாடசாலை நிறைவடைந்து மாணவர்கள் வெளியேறும் தருணத்தில் இருவர் வருகை தந்தனர். தரித்து விடப்பட்ட கார் தங்களுடையது என கூறி காரில் ஏற முற்பட்டனர். எனினும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அனுமதிக்கவில்லை.சம்பவ இடத்திற்கு வந்த குறித்த இருவரையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போது தாம் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என்றும் தாம் யாழ்ப்பாணத்துக்கு காலையில் வருகை தந்த போது விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் தாம் காரினை ஓரமாக நிறுத்தி விட்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றதாக கூறினர்.எனினும், பொலிசார் குறித்த காரினை முழுமையாக சோதனையிடடதுடன் காரில் வந்தவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்ட்து.இந்த சம்பவத்தினால் பாடசாலை சூழலில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்