ஹிஸ்புல்லாஹ் அமைக்கும் பல்கலைக்கழகம் தொடர்பில் நேரில் ஆராய விசேட குழு விரைவு…..!

மட்டக்களப்பு நோக்கி இன்று நாடாளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு விரைகின்றது. மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி.யின் தலைமையில் இக்குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து இந்தப் பல்கலைக்கழகம் குறித்து ஆராயவுள்ளனர்.ஆய்வினை மேற்கொண்டு தனது ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் நாடாளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா? பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.குறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி குழுவானது இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்