வடமராட்சியில் நடந்த திடீர் தேடுதல்…! இராணுவச் சீருடைக்கு ஒப்பான ஆடைகளை வைத்திருந்த 11 பேர் அதிரடியாகக் கைது..!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இராணுவ சீருடைக்கு ஒப்பான சீருடைகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்றைய தினம் பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தையல் நிலையங்கள் புடவைக் கடைகள் என்பனவற்றில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.இந்த தேடுதல் நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையினரின் சீருடைக்கு ஒப்பான ஆடைகள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 4 தமிழர்களும் 7 முஸ்லிம் வர்த்தகர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 11 பேரும் நேற்றைய தினம் பதில் நீதவான் சுப்பிரமணியம் வீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.அதன்போது அவர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்