லொறி- வான் நேருக்கு நேர் மோதி கோர விபத்து…! மூவர் ஸ்தலத்தில் பலி..! அறுவர் படுகாயம்!

கெக்கிராவ மட்டடுகமவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு அறுவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று (புதன்கிழமை) நேர்ந்துள்ளது. லொறி ஒன்றுடன் வான் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்