ரோன் கமாரக்களை வைத்திருப்பவர்களுக்கான மிக முக்கிய அறித்தல்! தவறும் பட்சத்தில் கடுமையான தண்டனை!

நாட்டில் இன்று நிலவும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சிவில் விமானச் சேவை அதிகாரியினால் CA-IS-2016 மற்றும் GEN-001 ஆம் இலக்கத்தில் 2017.01.10ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கேற்ப சகல விதமான பறக்கும் படப்பிடிப்புகருவிகள் (ரோன் கமராக்கள்) பறக்கவிடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களிடம் ரோன் கமரா இருக்குமாயின், அவை சம்மந்தமான சகல விதமான விபரங்களையும் 2019 மே மாதம் 28ம் திகதிக்கு முன்னராக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு பதிவு செய்யப்படாத ரோன் கமராக்கள் இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது தங்கள் வசமிருந்து கண்டுபிடிக்கப்படுமாயின் தாங்கள் கைது செய்யப்படுவதுடன், குறித்த நீதிச் சட்டத்திற்கேற்ப மிகவும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பதனையும் கவனத்திற்கொள்ளவும், எனவும் சிவில் விமான சேவை அதிகாரி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்