தினமும் இரவு உணவை தவிர்ப்பவரா நீங்கள்…? அப்படியானால் இது உங்களுக்குத் தான்… ! தவறாமல் படியுங்கள்..!

சிலர் இரவு நேரத்தில் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் படுத்துவிடுவார்கள். இரவில் குறைவாக உணவு உண்பதாலும், உண்ணாமலே உறங்குவதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.இரவு தூங்கும் முன் அதிகமாக உண்ணக் கூடாது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இதற்காகவே போதுமான உணவு உண்ணாமல் குறை பசியுடன் தூங்குவார்கள். எப்போதாவது இப்படி செய்கிறீர்கள் எனில் பிரச்சனை இல்லை. இதையே பழக்கமாகப் பின்பற்றினால் ஆபத்து. சிலர் உண்ணாமலேயே படுத்துவிடுவார்கள். குறைவாக உணவு உண்பதாலும், உண்ணாமலே உறங்குவதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். அவை என்னென்ன என்பதைக் காணலாம்.

மைக்ரோ நியூட்ரியன்ஸ் என்று சொல்லக் கூடிய மெக்னீசியம், விட்டமின் B12 மற்றும் விட்டமின் D3 உடலுக்கு மிக முக்கியம். இவை இல்லையெனில் ஊட்டச்சத்துக் குறைப்பாடு ஏற்படும்.இரவு உணவு இல்லை எனில் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும். இது உடலுக்குத் தேவையான மிக முக்கிய ஹார்மோன்.அதேபோல் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு அளவு பாதிக்கப்படும். இரவில் சரியான உணவு சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை எனில் பல நோய்கள், உடல் தொந்தரவுகளைச் சந்திக்கக் கூடும்.எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உறங்கச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் வராது. பசியால் வயிறு கிள்ளும். நாம் தூங்க நினைத்தாலும் வெறும் வயிறு மூளையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் இல்லையெனில் அது ஓய்வு நிலைக்குச் செல்லாது.பலரும் இரவில் அதிகமாக உண்பதால் எடை அதிகரிக்கும் என்று நினைப்பார்கள். இதற்காகப் பலரும் உண்ணாமலேயே தூங்கிவிடுவார்கள்.ஆனால் அது முற்றிலும் தவறு. வெறும் வயிற்றில் தூங்கினால், உடல் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற ஏற்கனவே தங்கியிருக்கும் கெட்டக் கொழுப்பைப் பயன்படுத்தும். அவை தேவையற்றக் கொழுப்புகள் என்பதால் அவற்றைப் பயன்படுத்தும்போது உடல் எடை அதிகரிக்கும்.இரவு நேரத்தில், நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட டயட் இருக்கிறீர்கள் அல்லது விரதம் இருக்கிறீர்கள் என்றால் அது பிரச்சனை இல்லை. அதுவும் நம் பாரம்பரிய விரதம் என்பது உடலில் உள்ள நச்சுத் தம்மையை நீக்கி கிருமிகளை அழிக்கக் கூடியது. இது உடலில் உள்ள பழுதை சீர் செய்வது போன்றது. ஆனால், அது தொடந்து இருக்கும் பட்சத்தில் தான் ஆபத்து.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்