வெறும் 10 லீற்றர் தண்ணீரில் 200 கிலோமீற்றர் பயணம்…!! மலைக்க வைக்கும் தமிழரின் அபரிதமான கண்டுபிடிப்பு…!! ஜப்பானில் மிக விரைவில் அறிமுகம்…!

10 லிட்டர் தண்ணீரில் 200 கிலோ மீட்டர் பயணிக்கும் இன்ஜினை கோவை இன்ஜினியர் உருவாக்கியுள்ளார். ஆனால், அது ஜப்பானில் மட்டுமே அறிமுகமாகிறது. இந்தியாவில் ஏன் அறிமுகம் செய்யப்படவில்லை? என்பது தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தி வருகிறது. இதுபோதாதென்று பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் கக்கி வரும் நச்சு புகை, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி கொண்டுள்ளது.இந்த 2 பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுபிடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்சவுந்திரராஜன் குமாரசாமி. இவர் கோயமுத்தூரை சேர்ந்தவர். ஆம், ஜி.டி.நாயுடு என்ற உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியை நமக்கு தந்த அதே கோவை மண்ணை சேர்ந்தவர்தான் சவுந்திரராஜன் குமாரசாமி.ஒன்பதாம் வகுப்பை கூட தாண்டாத சவுந்திரராஜன் குமாரசாமி பற்றிதான் தற்போது அனைவரும் பேசி கொண்டுள்ளனர்.பள்ளிப் படிப்பில் பெரிதாக சோபிக்காவிட்டாலும் கூட, தொழில்முறையில் பார்த்தால் சவுந்திரராஜன் குமாரசாமி ஒரு இன்ஜினியர்.என்ஜி ஆட்டோமொபைல்ஸ் என்ற நிறுவனத்தை சவுந்திரராஜன் குமாரசாமி சொந்தமாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் கூட இந்நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது.இந்த சூழலில் சவுந்திரராஜன் குமாரசாமி உருவாக்கியுள்ள ஆட்டோமொபைல் இன்ஜின் ஒன்று தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஐசி இன்ஜினுடைய (Super Sonic Hydrogen IC Engine) தொழில்நுட்பம் அசரடிக்கும் வகையில் உள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களுக்கு பதிலாக தண்ணீரில் (Distilled Water) இயங்க கூடிய வகையில், இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 10 லிட்டர் தண்ணீர் இருந்தால், வாகனம் 200 கிலோ மீட்டர்கள் வரை இயங்கும் என்பது ஆச்சரியமான தகவல்.எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு இது தீர்வாக இருக்கலாம்.அதேநேரத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னைக்கும் இந்த இன்ஜின் தீர்வு சொல்கிறது. ஹைட்ரஜனை எரிபொருள் ஆதாரமாக கொண்டு இந்த இன்ஜின் இயங்குகிறது.பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை போல் இது நச்சு புகையை கக்காது. மாறாக ஆக்ஸிஜனையே வெளியிடும். இத்தகைய இன்ஜின் தயாரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனவும் சவுந்திரராஜன் குமாரசாமி பெருமிதம் பொங்க குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ”இந்த இன்ஜினை உருவாக்க எனக்கு 10 ஆண்டுகள் ஆனது. உலகிலேயே இத்தகைய தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. ஹைட்ரஜனை எரிபொருள் ஆதாரமாக கொண்டு இயங்கும் இந்த இன்ஜின் ஆக்ஸிஜனையே வெளியிடும்.தற்போயை நிலையில் 100 சிசி என்ற திறனுடன்தான் இந்த இன்ஜினை டிசைன் செய்துள்ளேன். வாகனம் ஓடும்போது இந்த இன்ஜின் ஆக்ஸிஜனை வெளியிடும். இதுதொடர்பான அனைத்து சோதனைகளிலும் வெற்றிகரமாக ரிசல்ட் கிடைத்துள்ளது” என்றார்.கோவையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் உதவியுடன் சவுந்திரராஜன் குமாரசாதாய் நாடான இந்தியாவில்தான் தன்னுடைய கண்டுபிடிப்பு முதலில் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என சவுந்திரராஜன் குமாரசாமி விரும்பினார். ஆனால் இந்திய அதிகாரிகளிடம் இருந்து அதற்கு எவ்விதமான பாஸிடிவ் ரெஸ்பான்சும் வரவில்லை என கூறப்படுகிறது.தனது ஆராய்ச்சியை செய்துள்ளார். சூப்பர் சோனிக் எனவே தனது கண்டுபிடிப்பை அறிமுகம் செய்ய புதிய மார்க்கெட்டை அவர் தேட தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக ஜப்பான் அதிகாரிகளை அவர் அணுகினார். உடனே ஜப்பான் அரசு அவருக்கு பச்சை கொடி காட்டியது. எனவே ஜப்பானில் அவரது ஆட்டோமொபைல் இன்ஜின் விரைவில் அறிமுகமாகவுள்ளது.ஹைட்ரஜன் ஐசி இன்ஜினிற்காக, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய அரசு அவருக்கு காப்புரிமையையும் வழங்கியுள்ளது.இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இன்ஜின் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சவுந்திரராஜன் குமாரசாமி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவிலும் தனது கண்டுபிடிப்பு அறிமுகம் ஆகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ”இந்த இன்ஜினை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக அனைவரின் கதவையும் தட்டி பார்த்து விட்டேன். ஆனால் பாஸிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.எனவே ஜப்பான் அரசை அணுகி வாய்ப்பு பெற்றேன். வரும் நாட்களில் இந்த இன்ஜின் அங்கு அறிமுகம் செய்யப்படும்” என்றார்.கார் மற்றும் பைக் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களையும் இந்த இன்ஜினை கொண்டு இயக்க முடியும் எனவும் சவுந்திரராஜன் குமாரசாமி தெரிவித்துள்ளார். இத்தகைய கண்டுபிடிப்பாளர்களை தட்டி கொடுத்து, அங்கீகாரம் வழங்க வேண்டியது அரசின் கடமை.இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வெளியானாலும், பின்நாட்களில் அவர்கள் மாயமாக மறைந்து விடுவதற்கு அரசின் ஆதரவு இல்லாததே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இனியாவது அரசு கவனிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்