அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு சற்று முன்னர் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு….!!

இரண்டு வாரமாக கைவிடப்பட்ட பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.2019ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் வழமைப் போன்றே இடம்பெறும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை, அனைத்து பாடவிதானங்களும் உள்ளடக்கூடிய வகையில் நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.மேலும், மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது அனைத்து ஆசிரியர்களையும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்