குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தில் பௌத்த துறவிகள் மேற்கொண்ட மகத்தான செயல்….!! (வைரலாகும் காணொளி)

பேராபத்திற்கு முகம்கொடுத்த நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டி தேவாலயம் தொடர்பான காணொளியொன்று தற்போது முகப்புத்தகத்தில் பகிரப்பட்டு வருகிறது.பௌத்த துறவிகள் தேவாலயத்தை துப்பரவு செய்யும் காணொளியே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.
இதேவேளை, இந்த அன்பை நாங்கள் அனைவரும் நேசிக்கின்றோம்.பயங்கரவாதிகள் எமக்கு செய்த பெரிய அழிவின் பிரபலனை தற்போது பௌத்த, கத்தோலிக்கர்கள் என அனைவரும் ஒன்றாக அனுபவித்து, ஒற்றுமையின் பிணைப்பை முழு உலகத்திற்கும் காட்டியுள்ளார்கள்.சகோதரத்துவம் அதிகரித்து வருகிறது என இந்த காணொளி பதிவிடப்பட்டுள்ள முகப்புத்தக பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்