பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ள யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரச் சம்பவம்..!! வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு…!! இருவருக்கு நேர்ந்த கதி..?

யாழ்.சாவகச்சோிப் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவா்கள் மீது சரமாாியாக தாக்குதல் நடாத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 போ் காயமடைந்துள்ளனா்.

சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை (29.04.19) உட்புகுந்த நால்வர் கொண்ட குழுவொன்று வீட்டில் இருந்தவர்கள் மீது கொட்டன்களால் தாக்கி வாளினால் வெட்டி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 27வயதுடைய கனகரத்தினம் கௌதமன் மற்றும் 28 வயதுடைய பரராசசிங்கம் கோபிநாத் ஆகிய இருவரே காயமடைந்துள்ளனர். அதில், கௌதமன் வாள் வெட்டுக்கு இலக்காகி கை விரல் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த இருவரும் அயலவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையிலும், யாழில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்