குர்ஆன் வைத்திருந்த பிக்குவை மடக்கிப் பிடித்த பிரதேசவாசிகள்!!

குர்ஆன் ஒன்றை தம்வசம் வைத்திருந்த பிக்கு ஒருவரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.

மஹரகம தஹம் மாவத்தையில் இந்த நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது.

பிக்குவிடம் சிங்கள மொழியிலான குர்ஆன் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் அவரை மடக்கி, விசாரிக்க முயன்றனர். இதன்போது குர்ஆன் கீழே விழுந்​தது. அதனால் கோபமடைந்த பிக்கு அமைதியற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து பிக்குவை பொலிஸாரிடம் பிரதேசவாசிகள் ஒப்படைத்னர். பிக்குவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் கண்டியிலுள்ள விகாரையில் இருப்பதாகவும், குர்ஆன் பற்றி ஆய்வு செய்வதற்காக இதனை சிங்கள மொழியில் தான் வைத்திருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்