குண்டுத் தாக்குதல்களின் எதிரொலி…. !! தீவிர பாதுகாப்பில் யாழ் ஆயர் இல்லம்…!

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தின் பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், அண்மையில் யாழ். ஆயர் ஜஸ்டீன் ஞானபிரகாசத்தை சந்தித்து கத்தோலிக்க வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என புலனாய்வு பிரிவினர் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர்.இதனையடுத்தே யாழ். ஆயரின் இல்லத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு இதுவரை பெரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.

எனினும், கடந்த 24ஆம் திகதி முதல் ஆயர் இல்லத்தின் பாதுகாப்பு பணிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்