இலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…!!

இலங்கையில் கடந்த உயிர்த்த ஞயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகளை எச்சரித்து, அனானி என்ற சர்வதேச இணைய முடக்கல் குழு செய்தி அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த அனானி என்ற குழு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;2012ம் ஆண்டு பிரபல சர்வதேச ஊடகம் ஒன்று, இந்த குழுவினரை உலகில் மிகவும் அதிகாரச்செல்வாக்கு மிகுந்த 100 பேருக்குள் இணைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆங்கிலத்தில் அனோனிமெஸ் என்று அறியப்படும் இந்த குழு வெளியில் புலப்படாமல் செயற்படுவதால், அநாமதேயமான குழு என்று அறியப்படுகிறது. உலகெங்கிலும் இந்த குழுவுக்கு ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அனானி என்று தமிழில் கூறப்படும் இந்த குழுவை பல்வேறு தரப்பினரால் இணையவழி தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்ற போதும், இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை எச்சரிக்கும் வகையில் தகவல் அனுப்பியுள்ள அனானி குழு, ஐக்கியப்படுவதற்கான காலம் வந்திருப்பதாகவும், ஆகவே அதற்காக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்