நாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…!!

பலாங்கொடையில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நாடாளுமன்ற வீதி வரை படத்தை மறைத்து வைத்திருந்த நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.பலாங்கொடை கிரிமெட்டிதென்ன பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நாடாளுமன்றத்திற்குள் செல்வதற்காக விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்கள் ஆறும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதேநேரம் குறித்த இளைஞனிடம் டி-56 ரக துப்பாக்கி இரவைகள் இரண்டும், ஈய குண்டு ஒன்றும், சில செல்பேசி அட்டைகள், மூன்று கையடக்க தொலைபேசிகள், வங்கி அட்டைகள் சிலவும், சந்தேகத்திற்கிடமான பாரவூர்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த இளைஞனை பலாங்கொடை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்