கொழும்புக் குண்டுவெடிப்பில் பலியான பிரித்தானியக் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள்…!!

பிரித்தானியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஈஸ்டர் பண்டிகையினை இலங்கையில் கொண்டாட வருகை தந்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் அவரது குழந்தைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.டென்மார்க்கைச் சேர்ந்த Anders Holch Povlsen பிரித்தானியாவில் அதிக அளவு நிலம் வைத்திருக்கும் கோடீஸ்வரர்களில் ஒருவரும், Asos என்னும் ஒன்லைன் பெஷன் மற்றும் அழகுப்பொருட்கள் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகும்.

Anders Holch Povlsen மற்றும் அவரது மனைவி Anne Storm இருவருக்கும் Alma, Astrid, Agnes மற்றும் Alfred என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.அந்த நால்வரில் மூன்று பிள்ளைகள் இறந்து போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளபோதும் எந்த மூன்று பேர் இறந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பிள்ளைகள் குண்டுவெடிப்பில் உயிரிழப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அவர்களில் ஒருவரான Alma, சுற்றுலா சென்றிருந்தபோது நீச்சல்குளம் ஒன்றின் அருகே தனது உடன்பிறந்தோருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்