ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!முக்கிய மூன்று வீரர்களுக்கு கல்தா!

ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.12 ஆவது ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இப்போட்டி தொடருக்கான திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியின் 15 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (18) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.திமுத் கருணாரத்ன தலைமையின் கீழ் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டது.

அதன்படி லசித் மாலிங்க அஞ்சலோ மெத்தீவ்ஸ் திசர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், ஜீவன் மென்டிஸ், ஜெப்ரி வென்டர்சே, குசல் மென்டிஸ், லஹிரு திரிமான்ன, அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, இசுறு உதான,  நுவன் பிரதீப், மிலிந்த சிறிவர்தன ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, அகில தனஞ்சய, உள்ளிட்டவர்கள் அணியில் உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ஓசத பெர்ணான்டோ, அஞ்சலோ பெரேரா, கசுன் ரஜித, வணிந்து ஹசரங்க, ஆகியோர் மேலதிக வீரர்களாக அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்