மீண்டும் தலை தூக்கிய கிறிஸ் பூதம்! வசமாக மாட்டிய நபர்கள்!

திருகோணமலை – கிண்­ணியா பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த இரண்டு மாத கால­மாக இடம் பெற்று வந்த இரவு நேர கொள்ளைச் சம்­ப­வங்­க­ளோடு தொடர்­புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று சீனக் குடா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.கிறிஸ் மனி­தர்­கள் என்ற சந்­தேகத்தை ஏற்­படுத்தி பொது மக்களை அச்சம் கொள்ள செய்து கடந்த இரண்டு மாத கால­மாக இவர்கள் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இந்த கொள்ளைக் கும்பலை, பொது மக்களின் உதவியோடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பெரிய கிண்ணியா , பெரியாற்றுமுனை பிரதேசங்களை சேர்ந்த 18 வயது தொடக்கம் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.கிண்ணியாவிலுள்ள பணக்காரர்கள் யார் என்பதை அறிந்து இரவு வேளைகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

வீட்டின் ஓட்டை கழற்றி விட்டு வீட்­டுக்குள் இறங்கி உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து விசிறிவிட்டு நகை, பணம், மடிக் கணனி என பல பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், கொள்ளைச் சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சீனக்குடா பொலிஸார் குறிப்பிட்டனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்