நீண்ட நாட்களின் பின் யாழில் கொட்டித்தீர்த்த மழை…!! பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்…!

மிக நீண்ட நாட்களின் பின்னர் யாழில் இன்ற பலத்த மழை பெய்துள்ளது. வெப்பமான காலநிலையால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்த மக்கள், இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.யாழ் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழை சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கடும் காற்றுடன் சுழன்றடித்தது. இதனால், குடாநாட்டில் நிலவிய கடும் வெப்பம் சிறிது தணிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.சில இடங்களில் வீதியோரங்களில் நின்ற மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் பல இடங்களில் மின் சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்