யாழில் தனக்குத் தானே தீ மூட்டிய யுவதிக்கு நேர்ந்த துயரம்….!

வீட்டிலுள்ளவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து மனமுடைந்த 17 வயது யுவதி தனக்குத் தானே தீ மூட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.உடுப்பிட்டி இமையாணன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த சனிக்கிழமை வீட்டிலுள்ளவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து குறித்த யுவதி தனக்குத் தானே தீமுட்டிக் கொண்டார்.

உடனடியாக குறித்த யுவதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று(15) குறித்த யுவதி உயிரிழந்து விட்டதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்