குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்ட லொத்தர் சீட்டுக்கு அடித்த அதிஷ்டம்…!! இலங்கையருக்கு கிடைத்த லட்சம் ரூபா…!!

கம்பஹாவில் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என வீசப்பட்ட லொத்தர் டிக்கட் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது.

மீரிகம பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் டிக்கெட்டுக்கே இவ்வாறு அதிர்ஷ்டமாக பணம் கிடைத்துள்ளது.வீசப்பட்ட சீட்டினை அவதானித்த லொத்தர் சீட்டு விற்பனையாளர், அதனை வாங்கியவரை தேடிச் சென்று பணத்தை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

புத்தாண்டு பரிசாக அவர் அதனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் லொத்தர் சீட்டு விற்பனை செய்யும் புஷ்பகுமார பெரேரா என்பவரே இந்த செயலை மேற்கொண்டுள்ளார்.பூகொட பிரதேசத்தை சேர்ந்த ருவன் அசங்க என்ற நபர் மீரிகம நகரத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் லொத்தர் சீட்டு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

அண்மையில் அந்த இடத்திற்கு சென்ற நபர் தான் கொள்வனவு செய்த லொத்தர் சீட்டிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என அங்கிருந்த குப்பை தொட்டியில் அதனை வீசியுள்ளார்.எனினும், அந்த லொத்தர் சீட்டில் இருந்த விசேட இலக்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என விற்பனையாளருக்கு தெரியவந்த பின்னர் அவர் உரிமையாளரை தேட ஆரம்பித்துள்ளார்.

அதற்கமைய அதனை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார். தான் வீசிச் சென்ற லொத்தர் சீட்டின் பணத்தை தன்னிடமே ஒப்படைத்த, குறித்த இருவருக்கும் லொத்தர் சீட்டு உரிமையாளர் நன்றியை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்