91 வயதிலும் சுயமாக உழைத்துச் சாப்பிட ஆசைப்பட்ட மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை….!! ஆடுகளை விட்டு வைக்காத கயவர்கள்…!

மன்னாா் முருங்கன் பகுதியில் 91 வயதான மூதாட்டி வளா்த்த 19 ஆடுகளை திருடா்கள் திருடி சென்ற சம்பவம் தொடா்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.மன்னார் நானாட்டான் வெள்ளாளகட்டு சாளம்பனில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி,25 ற்க்கும் மேற்பட்ட ஆடுகளை அருகில் உள்ள காடுகளில் மேய்த்து வருபவர். வழமைபோன்று நேற்றும் நொச்சிக்குளம் பகுதியில் மேய்ப்பிற்காக விட்டு விட்டு

மதிய உணவிற்காக வீடு திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் அவ்விடங்களுக்குச் சென்று பார்த்த போது ஆடுகள் எவையும் அங்கே இருக்கவில்லை.பல இடங்களில் தேடியும் ஆடுகள் எவையும் கிடைக்கவில்லை. மாலை ஐந்து மணியின் பின் ஆறு ஆடுகள் மட்டுமே வீடு வந்துள்ளன.

இரண்டாவது நாளாக தேடியும் கிடைக்காத காரணத்தால், முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்