எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் இழக்கப் போகும் மஹிந்த?

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தகவல் தெரிவிக்கின்றன.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது உட்பட பல்வேறு விடயங்களில் இந்த கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கொழும்பில் ஒன்று கூடி, நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் தேசிய அரசாங்கத்தில் இணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்படுவதன் மூலம் மஹிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சி பதவி இல்லாமல் போகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுக் கொள்வதாக ஊடகங்களில் அறிவித்த உறுப்பினர்களின் உறுப்புரிமையும் இரத்து செய்யப்பட வேண்டும்.

குறித்த உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் அல்ல என கடிதம் ஒன்றை பொதுச் செயலாளர் ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்