திருமலையில் சிக்கிய ஒரு கிலோ கேரளக் கஞ்சா..!! இளைஞன் அதிரடிக் கைது…!!

திருகோணமலையில் ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.சம்பவம் தொடர்பில் மகாமாயபுர, மட்கோ பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கஞ்சா கொண்டு செல்ல சந்தேகநபர் பயன்படுத்திய முச்சக்கரவண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்