ஏ.ரி.எம் அட்டையில் பல லட்சம் மோசடி செய்த நபர் யாழ் நகரில் அதிரடிக் கைது….!!

வேறு ஒரு நப­ரின் ஏ.ரி.எம் அட்­டை­யைப் பயன்­டுத்தி பணத்தை எடுத்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.தேசிய சேமிப்பு வங்­கி­யின் யாழ்ப்­பா­ணம் நாவலர் வீதி­யில் அமைந்­துள்ள கிளை­யில் நேற்று மாலை பணத்தை எடுக்­கும் போதே குறித்த நபர் மாட்­டிக் கொண்­டார்.வங்கி ஊழி­யர்­க­ளால் மடக்­கிப் பிடிக்­கப்­பட்ட அவர் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரி­டம் ஒப் ப­டைக்­கப்­பட்டார். சம்­ப­வம் பற்றித் தெரி­ய­ வ­ரு­வ­தா­வது; நபர் ஒரு­வ­ரின் ஏ.ரி.எம் அட்டை அண்­மை­யில் காணா­மல் போயுள்­ளது. அதில், பணத்தைப் பெற்றுக் கொள்ள உத­வும் இர­க­சியக் குறி­யீ­டும் இருந்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் உரி­மை­யா­ளர் ஏற்­க­னவே வங்­கி­யில் முறை­யிட்­டுள் ளார்.

அதன் அடிப்­ப­டை­யி­லேயே குறித்த நபர் பிடிக்­கப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சந்­தேகநபர் அந்த அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி ஒரு லட்­சம் ரூபா­வரை எடுத்­துள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்