பூநகரியில் கண்டெடுக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட அபூர்வமான நாணயம்….!!

மிகப் பழமை வாய்ந்த நாண­யம் ஒன்று கிளி­நொச்­சி­யில் கண்­டெடுக்கப்பட்டுள்ளது. அந்த நாண­யக் குற்­றியில் தமிழ் மொழி­யிலான எழுத்­துக்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன.

கிளி­நொச்சி, பூந­கரி செம்­மன் குன்று பல்­லாய்ப் பகு­தி­யில் நேற்­று­முன்தினம் நாண­யக்­குற்றி கண்­டு ­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.அந்­தப் பகு­தி­யில் கண்­ணி­வெடி அகற்­றும் செயற்­பாட்­டில் ஈடு­ப­டு­ப­வர்­கள் நாண­யக் குற்­றியை மீட்­டுள்­ள­னர். அதில் ‘சேது’ என்று தமிழ் எழுத்­துக்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன.

நாண­யம் மீட்­கப்­பட்ட பகுதி தமிழ் அர­சி­யான அல்லி ராணி ஆட்சி புரிந்­த­மைக்­கான வர­லா­றுச் சான்­று­கள் மீட்­கப்­பட்ட பிர­தே­சம் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.சேது நாண­யம் என்­பது 13 தொடக்­கம் 17 ஆம் நூற்­றாண்­டின் முற்­ப­கு­தி­வரை யாழ்ப்­பா­ணத்தை ஆண்ட ஆரி­யச்­சக்­க­ர­வர்த்தி வம்­சத்­தி­ன­ரால் வெளி­யி­டப்­பட்ட நாண­யம் ஆகும்.

இதன் ஒரு பக்­கத்­தில் நின்ற நிலை­யி­லான ஒரு மனித உரு­வ­மும் அதன் இரு பக்­கங்­க­ளி­லும் விளக்­கு­க­ளும் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. மறு பக்­கத்­தில் யாழ்ப்­பாண அர­சின் சின்­ன­மான நந்­தி­யும் ‘சேது’ என்ற சொல்­லும் மேலே பிறை­யும் பொறிக்­கப்­பட்­டுள்­ளன.

சேது நாண­யங்­கள் இலங்­கை­யின் வட பகு­தி­யி­லும், தென்­னிந்­தி­யா­வி­லும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.முன்­னர் இந்த நாண­யங்­களை யார் வெளி­யிட்­டார்­கள் என்று தெரி­யா­மல் இருந்­த­போது பல­ரும் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­த­னர்.

இவை சோழ­மன்­ன­ரால் வெளி­யி­டப்­பட்­டவை என்று சில­ரும், சிங்­கள மன்­னன் பராக்­கி­ர­ம­பா­கு­வால் வெளி­யி­டப்­ப­டவை என்று சில­ரும், இரா­ம­நா­த­பு­ரத்­துச் சேது­ப­தி­க­ளால் வெளி­யி­டப்­பட்­டவை என வேறு சில­ரும் கரு­தி­னர்.1920ஆம் ஆண்டு ஞானப்­பி­ர­கா­சர் இது யாழ்ப்­பாண மன்­னர்­கள் வெளி­யிட்­டவை என்­ப­தைச் சான்­று­க­ளு­டன் விளக்­கி­னார் என்று விக்­கி­பீ­டியா தக­வல் களஞ்­சி­யத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்