பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து… தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி….!!

கொழும்பு ஹங்வெல்ல பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், எதிர் திசையில் பயணித்த முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட மூவர் பாதுக்கை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சாரதி மற்றும் முச்சக்கரவண்டியில் பின்புறம் அமர்ந்து பயணித்த ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.விபத்தில் மற்றுமொருவர் காயமடைந்து, பாதுக்கை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்தில் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 80 வயதான தந்தை மற்றும் 44 வயதான மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பாதுக்கை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்