பெற்ற தாய்க்கே கத்தியைக் காட்டி பணம் பறித்து குடித்த மகன்….!! இலங்கையில் இப்படியும் ஒரு கேவலமான பிள்ளையா…?

மட்டக்களப்பு சின்னமுகத்துவாரத்தில் நிகழ்வு பெற்றெடுத்த தாயிடம் தான் குடிப்பதற்கு என்று கத்தியைக் காட்டிமிரட்டி 2000ரூபா பணத்தை வசூலித்து பெற்றெடுத்த மகன் செய்த மோசமான செயல் அதிரவைத்துள்ளது.மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரம் கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய மகன் தன்தாயின் முன்னேயும்,கழுத்திலும் கத்தியைக்காட்டி குடிப்பதற்கு 2000 ரூபா பணத்தை வசூலித்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.00 மணியளவில் மட்டக்களப்பு சின்னமுகத்துவாரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள பொதுமக்கள் இச்சம்பவத்தை நேரடியாக பார்த்துள்ளார்கள்.பெற்றெடுத்த தாயுக்கும்,மகனுக்கும் இடையே பலமணி நேரமாக வாக்குவாதச் சண்டையாகவும்,பணப்பிரச்சனையாகவும் இடம்பெற்றுள்ளது.

கத்திக்கு பயந்துபோன வறுமைப்பட்ட குறித்த இளைஞனின் தாய் தனது வீட்டுக்கு அருகில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்க்குச் சென்று பிச்சைச்சம்பளம் எடுத்து தருகின்றேன் என்று 2000 ரூபா பணத்தை வாங்கி தனது மகன் குடிப்பதற்கு கொடுத்துள்ளார்.தனது தாயிடம் பெற்றுக்கொண்ட 2000 ரூபா பணத்தை குறித்த இளைஞன் தனது நண்பர்களிடம் சேர்ந்து பியர் வாங்கி குடித்துள்ளார்.

பாடசாலைக்கு மட்டும் அனுப்பி வைப்பதுதான் பெற்றோர்களின் கடமையல்ல. தங்களின் மகன் என்ன செய்கின்றான்,எங்கு போகின்றான் வருகின்றான் என்றும்,தனது மகனது நண்பர்களின் தீண்டத்தகாத செயல்கள்,நடத்தைசார் விடயங்கள்,ஒழுக்க விழுமியங்களையும் பெற்றோர்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்