பெண் ஊழியருக்கு நீதி வேண்டி நள்ளிரவில் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் இறங்கிய விமான ஊழியர்கள்….!! ஸ்தம்பித்துப் போன கட்டுநாயக்கா….!!

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் சிலர் நள்ளிரவில் திடீர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது.பெண் ஊழியர் ஒருவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவிற்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் பாரிய திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபரின் மனைவியிடம், இலங்கை சுங்க பிரிவின் தரவு செயலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சுங்க பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.இந்த நடவடிக்கைக்காக எதிர்ப்பு வெளியிடுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை சுந்திர ஊழியர் சங்கத்தின் குழுவினர் தங்கள் பணியில் இருந்து விலகியிருந்துள்ளனர். அத்துடன் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், குறித்த பெண் ஊழியர் திருப்பி அனுப்பப்பட்டமையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவிருந்த பதற்ற நிலை அமைதியாகியுள்ளது.குறித்த பெண் ஊழியரின் பாதுகாப்பு குறித்து கருதியே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்