நீண்ட காலத்தின் பின்னர் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்கள் சாதனை……

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் கிரிக்கட் அணிக்கு கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வரவேற்பு வழங்கப்பட்டது.விளையாட்டு அமைச்சும், கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் கிரியுள்ள விக்ரமசீல தேசிய பாடசாலையில் இடம்பெற்றன.10 ஓவர்கள் கொண்ட குறித்த சுற்றுப் போட்டியின் நேற்றைய இறுதிப் போட்டியில் நெதிரிகிரிய தேசிய பாடசாலையை எதிர்த்து கிளிநொச்சி இந்துக் கல்லூரி போட்டியில் ஈடுபட்டது.இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நெதிரிகிரிய தேசிய பாடசாலை அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இந்துக்கல்லூரி அணி 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 93 ஓட்டங்களை பெற்றது. பிரதீசன் ஆட்டமிழக்காது 43, பாஸ்கரன் 32 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றனர்.இந்நிலையில், 94 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி எனும் இலக்கோடு ஆட்டத்தை ஆரம்பித்த நெதிரிகிரிய தேசிய பாடசாலையை தேசிய பாடசாலை அணி 7.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.38 ஓட்டங்களால் வெற்றிபெற்ற கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி தேசிய ரீதியில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்