திருமண உணவில் பழுதடைந்த ஆட்டிறைச்சி….!! மூவர் வைத்தியசாலையில்….!! கைதான மண்டப உரிமையாளருக்கு பிணை……!

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வழங்கப்பட்ட ஆட்டிறைச்சி பழுதடைந்தமையினால் 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் திருமண மண் டபத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக் கு தாக்கல் செய்யப்பட்டு உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

நேற்றைய தினம் திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற திருமணத்தில் ஆட்டிறைச்சி உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்கொண்ட 3 பேர் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்திய உரும்பிராய் பொதுச் சுகாதார பரிசோதகர் உரிமையாளரான பெண்ணுக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்தபட்ட உரிமையாளருக்கு எதிராக பழுதடைந்த ஆட்டிறைச்சியை உணவில் சேர்த்தமை மற்றும் சுகாதார அனுமதி பெறாமல் உணவை கையாண்டமை ஆகிய இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது.இதனை ஆராய்ந்த நீதிவான் வழக்கை ஒத்திவைத்து உரிமையாளரை பிணையில் விடுவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்