வடக்கு அமைச்சரவையிலிருந்து தூக்கப்பட்டார் டெனிஸ்வரன்!

நீண்ட விவாதிப்புகள் ஆலோசனைகளுக்கு பின்னர் வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ் வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார்.

அவரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் பா.டெனீஸ்வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமையால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் கூரே சட்டமா அதிபர் திணைக்களத்தை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இடைஞ்சலாக இருந்து வந்தார். அவரது கட்சியான ரெலோ, 6 மாத காலத்துக்கு அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தும் முடிவை எடுத்திருந்தது.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதனடிப்படையில், டெனீஸ்வரனை தனது அமைச்சரவையிலிருந்து தூக்கியுள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.டெனீஸ்வரன் வகித்த அமைச்சுப் பதவியில் வர்த்தக வாணிபத்தை, தற்போது மகளிர் விவகார அமைச்சராகவுள்ள திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சிய பொறுப்புக்களை தானும் பொறுப்பேற்பதாகத் தெரிவித்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்றுக் காலை கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக அந்த அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்குவதில் சட்டரீதியாக சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்