உலகக் கிண்ண போட்டிகளுக்காக பிரமாண்டமாக தயாராகும் கட்டார் மைதானம்!

தீவி­ர­வா­தத்­திற்கு கட்டார் ஆத­ரவு தெரி­விப்­ப­தாகக் கூறி ஐக்­கிய அரபு அமீ­ரகம், சவூதி அரே­பியா உள்­ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உட­னான உறவை முறித்­துக்­கொண்­டுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு, பிபா உலகக் கிண்ணக் கால்­பந்துத் தொடரை பிரமாண்டமாக தமது நாட்டில் நடத்துவதற்கு கட்டார் தயாராகி வருகின்றது.

அதன் ஒரு­ப­கு­தி­யாக, அரே­பியத் தொப்பி வடி­வி­லான கால்­பந்து மைதா­னத்தை அமைக்க இருப்­ப­தாக கட்டார் அறி­வித்­துள்­ளது.

தலை­நகர் டோஹாவில் அமைக்­கப்­ப­ட­வி­ருக்கும் அல் – துமாமா மைதானம், பாரம்­பரிய ‘காஃபியா’ எனப்­படும் அரே­பியத் தொப்பி வடிவில் அமையவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.சுமார் 40,000 பேர் வரை அம­ரக்­கூ­டிய வகையில் உரு­வாக இருக்கும் இந்த மைதானம், கட்­டாரைச் சேர்ந்த கட்­டடக் கலைஞர் ஒரு­வரால் வடி­வமைக்கப்­பட்­டுள்­ளது.

இஸ்­லா­மி­யர்­களை ஒன்­றி­ணைக்கும் சின்­ன­மாக இந்த மைதா­னத்தை, அரே­பியத் தொப்பி வடிவில் அமைக்க இருப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹஸன் அல் தவாடி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்