மருத்துவமனையில் திடீர் அனர்த்தம்! பரிதாபகரமாக பலியாகிய கர்ப்பிணிப் பெண்!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் லிப்ட்டில் ஸ்ட்ரெச்சரோடு நுழைக்கப்பட்டபோது திடீரென லிப்ட் எழும்பியதால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.ஸ்பெயின் நாட்டில் உள்ள வால்மே மருத்துவமனையில் 26 வயது ரோசியோ கார்ட்ஸ் என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.குழந்தை பிறந்தவுடன் குழந்தை, தாய் இருவரையும் வேறு விடுதிக்கு மாற்றுவதற்காக ஸ்டிரெச்சரோடு லிஃப்டுக்கு மருத்துவனை ஊழியர்கள் அழைத்து சென்றனர்.

அப்போது ஸ்ட்ரெச்சர் உள்ளே நுழையும் முன்பே லிஃப்ட் திடீரென இயங்கியது. இதனால் ஸ்டிரெச்சரில் இருந்த அந்த பெண் இரண்டாக பிளக்கப்பட்டார். இரண்டாக பிளக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார்.

நல்லவேளையாக குழந்தை எந்தவிதமான பாதிப்புகளுமின்றி தப்பித்திருக்கின்றது. இந்தச் சம்பவம் குறித்து பூரண விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்